உங்கள் செல்பேசியே  உங்களுக்கு எமன்.

நீங்கள் பயன்படுத்தும் உங்களின் கையடக்க செல்பேசியில் மூலம் நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா?

இன்றைய மனிதர்களின் மூன்றாவது கையாகக்கருதப்படுவது உங்களின் கையடக்க தொலைபேசிகள். ஒரு நிமிடமேனும் கையடக்க தொலைபேசியின் துணை இல்லாமல் யாராலும் இயங்கிட முடியாது என்ற நிலை இன்றைய காலகட்டத்தில் நிலவிவிட்டது. 90களின் பிற்பகுதியிலேயே இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் கையடக்க பாவனை என்பது ஆரம்பமானது. ஆயினும் அதிவேக வளர்ச்சியாக இதன் பயன்பாடும் உபயோகமும் உலகத்தை ஆட்டிப்படைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

உங்களின் கையடக்க தொலைபேசி ஒலிக்காத போதும், ஏதேனும் சமிக்ஞைகளை வெளியிடாத போதிலும் கூட நமது கவனமானது எமது தொலைபேசியை நோக்கியதாக இருக்கும் என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. ஒரு நொடி எங்களின் தொலைபேசியை காணவில்லையென்றால் நமது முழுநாளும், வேலையும் ஸ்தம்பிதமடைந்துவிடுவதை மறுப்பவர் யாரும் இல்லை. அவ்வகை முக்கியத்துவம் பெற்றுவிட்டது நமது கையடக்க செல்பேசிகள். 

உண்மையாக சொல்லப்போனால் நமது வேலைகளை இலகுபடுத்தவென உருவாக்கப்பட்ட இந்த செல்லிடப்பேசிகளினால் எதிர்மறையான பாதிப்புக்களே அதிகமாக உணரப்படுகின்றது. செல்லிடப்பேசி பாவனைக்கு அடிமையாதல் எனும் மனோவியாதியில் இன்றைய பெருவாரியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது. பெருவாரியாக செல்பேசிபாவனை என்பது மனோ ரீதியாக மட்டுமன்றி உடல்ரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். 

செல்பேசி கதிர்வீச்சுகளால் ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளை பற்றிய அறிவுறுத்தலை கலிபோர்னியாவின் பொது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தத்தமது செல்பேசி பாவனையை குறைத்துக்கொள்ளுவதுடன் முடிந்தளவு செல்பேசிகளை அருகில் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே உடல்நலத்திற்கு சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்பேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோய், மனநிலை பாதிப்பு மற்றும் ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்பேசிகள் அதிகளவு கதிர்வீச்சை வெளிபடுத்தக் கூடியதாக உள்ளதால் அவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது கவலை அளிக்கும் வகையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக சி.டி.பி.ஹச் இயக்குனர் டாக்டர் கரேன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு செல்பேசி பாபவனையால் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புக்களை இங்கு இனம்காணலாம்.

1. தூக்கம் தூரச்செல்லும் 

செல்பேசிப்பவனையால் நீங்கள் முதலில் எதிர்கொள்ளவிருக்கும் பெரியபாதிப்பு உங்களின் தூக்கத்தை தொலைப்பதே ஆகும்.செல்பேசிகளில் இருந்து வெளிவரும் வெளிச்சம் உடலின் சர்கார்டியன் ரிதம் எனப்படும் உடலியல் இயக்க செயன்முறையினை பாதிப்படைய செய்யும். அவ்வாறே இரவில் உங்கள் படுக்கைக்கு அருகில் உங்களின் செல்பேசிகளை வைத்து உறங்கும் போது அதன் அதிர்வுகளால் உங்கள் உறக்கநிலை குழப்பமடையும் நிலைமை ஏற்படும். இதுவே பல்வேறு உடல் அசௌகரியங்களுக்கு வித்திடுவதாகும்.

ஆய்வின்படி சுமார் 20 ற்கும் 30ற்கும் இடைப்பட்ட வயதினர் கடந்தகாலங்களில் மனோவியாதிகள், பார்வை குறைபாடுகள் மற்றும் உடலியற்கூறுகள் சார்ந்த உபாதைகளுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறியப்பட்டது. இதற்கான காரணத்தினை ஆராயும்போது அவ்வகை பாதிப்பிற்கு உள்ளவர்கள் பொதுவாக செல்பேசிபாவனையினை அதிகளவில் மேற்கொள்பவர்கள் என அறியப்பட்டது.அவ்வாறே மென் திரைகள் அல்லது தொலைக்காட்சி திரைகளை அருகில் வைத்துக்கொண்டு உறங்குவதால் தூக்கநிலை குளறுபடியாகும் .இதுவே அனைத்துவித உடற்பாதிப்புகளுக்குமான அடித்தளம் என்பதை உணர்தல் அவசியம் ஆகும்.

உறக்கமினமை நிலை உங்களுக்கு தோன்றினால் கண்டிப்பாக நீரிழிவு, தொப்பை போடுதல், உடற் சுரப்புகள் சமமின்மை, உயர் இரத்த அழுத்தம் போன்ற உபாதைகள் ஏற்படும் என்பதை கண்டிப்பாக கருத்திற்கொள்ள வேண்டும்.

2. தொற்றுநோய் பரவல் அதிகரிக்கும்.

மருத்துவமனை, பொது கழிப்பிடம், சந்தை உள்ளிட்ட பொது இடங்க்களில் நாம் செல்பேசிகளை பாவிக்கும் பொது அவற்றின் மூலம் பல தோற்று வியாதிகளை காவும் கருவியாக எமது செல்பேசிகள் அமைந்துவிடுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா?. கடந்த 2011 ஆம் ஆண்டு London School of Hygiene & Tropical Medicine ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் ஏலுமானமாக 400 செல்பீசிகள் இவ்வாறு பொது இடங்களில் பாவிக்கப்பட்டவையாக இருந்தன. அவற்றில் 92% சதவீதமானவை பாக்டீரியாவை கொண்டிருந்தது அனுமானிக்கப்பட்டது.

அவ்வாறே,வைத்தியசாலைகளில் சுற்றுசூழலில் காணப்படும் நீர்நிலைகளில் பரவக்கூடிய நோசகோமியா நோய்கிருமிகள் அதிகளவில் அங்கு வரும் பார்வையாளர்களின் செல்பேசியில் மூலம் பரவல் அடைவதை Journal of Hospital Infection ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எனவே பொது இடங்களில் செல்பேசி பாவனையினை முடிந்தளவு தவிர்ப்பது உடல் சுகாதாரத்திற்கு நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

3. இதயத்தை பலவீனப்படுத்தும்.

செல்பேசிகளில் இருந்து வெளிவரும் மின் காந்த அலைகளானவை இதயத்தை பலம் இழக்க செய்வதுடன் மின் காந்த ஆற்றலின் விஷத்தன்மையானது செல்களை சேதப்படுத்தவும் செய்கின்றதாக அறியப்படுகின்றது.கம்பியில்லா கையடக்க தொலைபேசியின் மின் காந்த அலைகளின் கதிர்வீச்சானது இதய நோய்கள் ஏற்படுத்துவதை அதிகப்படுத்துவதாக European Journal of Oncology அறியத்தந்துள்ளது.
பொதுவாக இடப்பக்கம் சட்டைப்பைகளுக்குள் எமது தொலைபேசியை வைக்கும்போது அதிலிருந்து வெளிவரும் மின் காந்த கதிர்களின் செயற்பாடானது நேரடியாக இதயத்தை பாதிக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. அவ்வாறே உயர் இரத்த அழுத்தம் ஏற்பட நேரடி காரணியாகைவை காணப்படுகின்றதாகவும் அறியப்படுகின்றது.
எனவே சட்டைப்பைகளில் செல்பேசிகளை வைத்துக்கொள்வதை தவிர்த்திடவும் இதய கோளாறு உள்��வர்கள் மேலும் செல்பேசிகளை பயன்படுத்தாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

4. இனப்பெருக்க காரணிகளை மங்கச்செய்கின்றது.

செல்பேசியில் காந்த மின்னலைவீச்சானது விந்தணுக்களை சேதப்படுத்துவதாக Reproductive bio medicine online நாளிதழ் ஆய்வறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. மேற்சட்டைப்பையில் மட்டுமல்ல காற்சட்டைகளில் கூட ஆண்கள் செல்பேசிகளை வைத்துக்கொண்டு செல்வதால் அதன் கதிரியக்க தன்மையானது ஆண்களின் விண்தகு உற்பத்தியினை குறைவடையச்செய்வதனை அனுமானித்துள்ளனர்.
செல்பேசியில் அதிகபட்ச பாவனை ஆண்களின் விந்து உற்பத்தியை பேரளவில் குறைவடைய செய்வதுடன் பெண்களுக்கு கருத்தடை ஏற்படுத்தவும் வழி வகுப்பதாக அறியப்படுகின்றது. 

5. மன அழுத்தத்தினை அதிகப்படுத்தும்.

ஒரு சிலரை நாம் கவனித்தோமானால் நொடிக்கொருமுறை தமது செல்லிடப்பேசிகளை தட்டிப்பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். தொலைபேசி இயங்கினாலும் இயங்காது விட்டாலும் தொலைபேசியை தட்டிப்பார்பது மற்றும் சரிபார்ப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வார்கள். இவ்வைகையானோர் அதிகளவில் மன அழுத்தத்திற்கு உள்ளவர்களாக அறியப்படுகின்றனர். அவ்வாறே தொடர்ச்சியாக ஒளி மற்றும் ஒலி எழுப்புதல் மன ரீதியான பாதிப்புகளை அதிகப்படுத்தும் காரணியாக கருதப்படுகின்றது.
தொழில்நுட்பத்தின் அதிகபட்ச பயன்பாடானது மனோவியல் ரீதியான அனைத்து பாதிப்புகளுக்கும் வழி அமைக்கும் முக்கிய காரணியென Computers in Human Behavior தமது ஆய்வில் அறிவித்திருந்தது.

மேலும் CDPH ஆய்வானது செல்பேசி பாவனையாளர்களுக்கு பின்வரும் பரிந்துரையினை செய்துள்ளது.

  • பொதுமக்கள் தங்களின் கைபேசியை பாக்கெட்டிகளில் வைத்திருக்கக் கூடாது.
  • நீண்ட நேரமாக தங்களின் காதுக்களில் வைத்திருக்கக்கூடாது.
  • தூங்கும் போது கைபேசியினை பட்டுக்கையில் வைத்து கொண்டே தூங்குவது மிகவும் ஆபத்தானது.
  • வெறும் 2 புள்ளிகளோ அதற்கும் குறைவாகவோ சிக்னல் இருந்தால் செல்போன்களை பயன்படுத்துவதை முடிந்தளவு குறைத்துக் கொள்ள வேண்டும்
  • அதிவேகத்தில் செல்லும்போது சிக்னலை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக செல்போன்கள் அதிக கதிர்வீச்சை வெளியிடுவதால், பயணங்களின்போது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • செல்போன்களை பாக்கெட்களில் வைப்பதற்கு பதிலாக, பைகளில் வைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ள CDPH, முடிந்தவரை Headphone பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
  • உடலில் பல பிரச்சனைக்களை உண்டாக்கும் கருவியாக கைபேசி மாறிவருகின்றது.
  • கைபேசியை குறைவாக பயன்படுத்துவது நல்லது என சி.டி.பி.ஹச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • பெரியவர்களைவிட, வளரும் குழந்தைகளின் மூளையில் கதிர்வீச்சு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பழக்கத்தில் இருக்கும் செல்பேசி பாவனையினை உடனடியாக மாற்றிக்கொள்வது என்பது சிரமமான செயலாக நீங்கள் எண்ணினால் 9இதன் பாதிப்பானது பெரியளவில் உங்களை உடலியல் ரீதியாகவும் மனோவியல் ரீதியாகவும் பாதிப்படைய செய்யும் என்பதை கண்டிப்பாக நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

Article By TamilFeed Media, Canada
4441 Visits

Share this article with your friends.

More Suggestions | Health